New Videos from Youtube

மட்டன் கிரேவி - mutton gravy







  1. ஆட்டுக்கறி - அரைக் கிலோ 
  2. பழுத்த நாட்டு தக்காளி - 4 
  3. சின்ன வெங்காயம் - 15 
  4. இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி 
  5. பட்டை - 1 
  6. பிரிஞ்சி - 1 
  7. கிராம்பு - 3 
  8. கறிவேப்பிலை - ஒரு கொத்து 
  9. பச்சை மிளகாய் - 3 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
  10. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி 
  11. மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி 
  12. கொத்தமல்லி - சிறிதளவு







தக்காளி, வெங்காயம் தனித்தனியாக அரைக்கவும். தக்காளியுடன் சிறிதளவு ஆரஞ்ச் கலர் சேர்த்து அரைக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும். குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி சேர்த்து வதக்கவும். 

அதன் பின் கறிவேப்பிலையும் பச்சை மிளகாயும் சேர்க்கவும். அதில் தக்காளி விழுது, வெங்காய விழுது ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 

 இப்போது மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடங்கள் வதங்கிய பின் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின் குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வேக விடவும்.

 ப்ரஷர் அடங்கியதும் கொத்தமல்லி சேர்த்து நீர் வற்றும் வரை ஹை ப்ளேமில் வைத்து கிளறவும். சுவையான மட்டன் கிரேவி தயார். சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் அருமையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வேர்க்கடலை குழம்பு






பச்சை வேர்க்கடலை -
கால் கப் புளி -

கோலி அளவு சின்ன வெங்காயம் -10
தக்காளி - ஒன்று 
அரைத்த தேங்காய் விழுது - ஒரு கரண்டி
பூண்டு - 10 பல் 
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி 
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி 
பெருங்காயம், 
உப்பு, கொத்தமல்லித் தழை - 
தேவைக்கு தாளிக்க: கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு 
எண்ணெய்





புளியைக் கரைத்து அதனுடன் வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

 நன்கு வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளிதம், கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

 சுவையான வேர்க்கடலை குழம்பு தயார். சுட்ட அப்பளம் இதற்கு சரியான ஜோடி. விருப்பட்டால் கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய், பூசணி சேர்த்தும் செய்யலாம்.

சில்லி சிக்கன்


தேவையான பொருட்கள்:
_______________________
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை
__________
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.
சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.
குறிப்பு:
_______
உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.

பப்பாளி பழ அல்வா

தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை
பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.

அம்மணிக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.




செய்முறை:

பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.
* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

நிலக்கடலை சுண்டல்

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.



செய்முறை:

நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.

* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

பாகற்காய் தொக்கு


தேவையான பொருட்கள்:

பாகற்காய் - பொடியாக நறுக்கியது
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
எண்ணை தேவையான அளவு
உப்பு - ருசிக் கேற்ப
காய்ந்த மிள்காய் ..கடுகு உளுத்தப் பருப்பு - தாளிக்க
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை:

முதலில் சிறிது எண்ணெய் விட்டு சூடானபின் கடுகு... உளுத்தப் பருப்பு... மிளகாய் இவற்றை விட்டு வதக்கவும்.

பிறகு வெட்டிவைத்த வெங்காயத்தஒயும் சேர்த்து வெங்காய வாசனை போகும் வரை நன்று வதக்கவும்... கூடவே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்.

இப்போது வெட்டிவைத்த பாகற்காயை சேர்த்து .. மஞ்சள் தூள் தூவி அரை டம்ளர் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வேக விடவும்.

இப்போ மிளகாய்த்தூள், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அடிபிடிக்காத வாறு கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

நல்லா வதங்கிய பின் பார்த்தால்... நம்ம பாகற்காய் தொக்குவானது ரெடியாக சுடச்சுட இருக்கும்

இதனை தோசை... சப்பாத்தி... அரிசி சோறு .. எதுவானானும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்..

பாகற்காய் உடலுக்கும் மிகவும் நன்னை பயக்கும்.

ரசமாலை


செய்முறை:

பால் 1 லீட்டர்
சீனி 500 கி
பன்னீர் 250 கி
குங்குமபூ கொஞ்சமாக
பாதாம் பருப்பு சிறிதாக வெட்டியது 3 தே.க
பிஸ்டாஜ்ஸிஜோஸ் சிறிதாக வெட்டியது 3 தே.க
ஏலக்காய் தூள் 1/2 தே.க

1. ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சீனியையும்,நீரும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வையுங்க.
2. இன்னோர் பாத்திரத்தில் பாலையும், மீதியிருக்கும் சீனியையும் கலந்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்து அரைவாசி ஆகும் வரை அடுப்பில் இருந்து இறக்க வேண்டாம்.
3. பால் பாதியானதும் அதில் ஏலக்காய் பொடி, வெட்டிய பருப்புகள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் இருந்து இறக்குங்க.
4. பன்னீரை எடுத்து சிறு உருண்டைகளாக்கி சற்று அமத்தினால் சரியான வடிவம் கிடைத்துவிடும்.
5. இவ்வுருண்டைகளை கொதித்து கொண்டிருக்கும் சீனியில் போட்டு 10 நிமிடங்களுக்கு அவித்து எடுங்க. அவிக்கும் போது பாத்திரம் மூடியிருக்க வேண்டும்.
6. 10 நிமிடத்தில் பன்னீரை வெளியே எடுத்து வையுங்க. சீனிகரைசல் வடிவதற்கு சிறிது நேரம் குடுங்கள்.
7. ஏற்கனவே கொதிக்க வைத்த பாலில் பன்னீர் உருண்டைகளை போட்டு மேலும் 4-5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்க.
8. 4-5 நிமிடங்களின் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவிடுங்க. சிலர் சிறிது சூடாக இருக்கும் போது சாப்பிடுவார்களாம். பெரும்பாலானோர் சூடு ஆறியதும் 5 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்த பின்னர் சாப்பிடுவார்களாம். எது எப்படியோ கஸ்டபட்டு செய்ததை சாப்பிட்டால் சரி தான்.

குறிப்புகள்:
1. கொதிக்கும் சீனி கலவைக்கு எப்போதும் மதிப்பு குடுங்க.
2. சீனிகரைசலில் அவித்த பன்னீரே சுவையாக இருக்கும். வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் சற்று கவனமாக இருக்கவும். பாலில் போடா முன்னரே பாதி பன்னீரை நான் இழந்துவிட்டேன்.
3. பால், சீனி என பயங்கரமா இருக்கு. அடிக்கடி செய்து சாப்பிடாதிங்க.

இப்படியெல்லாம் அழைக்கலாம்:
ரஸ் மலய்
ரஸ் மலாய்
ரசமலாய்
ரசமாலை

டயமன்ட் பர்பி

தேவையான பொருட்கள்:
கச்சான் - 1 கப்
சீனி - 1 1/2 கப்
பால் - 1 1/2 கப்
தட்டிற்கு போடுவதற்கு கொஞ்சமா நெய்

செய்முறை:
1. பச்சை கச்சானை வறுத்து தோலுறித்தி எடுத்து கொள்ளனும்.
2. பாலில் கச்சானை 2 மணித்தியாலங்களுக்கு ஊற வைக்க வேணும்.
3. பாலையும், கச்சானையும் நன்றாக அரைத்தெடுக்கணும்.
4. ஒரு சட்டியில் அரைத்த விழுதையும், சீனியையும் போட்டு கிளற ஆரம்பிக்கணும்.
5. விடாமல் கிளறிக்கொண்டே இருக்கும் போது, கலவை உருண்டு வரும். உடனே நெய் பூசிய ஒரு தட்டில் போட்டு தட்டி எடுக்கணும்.
6. பின்னர் வேண்டியபடி வெட்டி எடுக்கலாம். டயமன்டா வெட்டி எடுத்தா அதுக்கு பேர் தான் "டயமன்ட் பர்பி"

கவனிக்க வேண்டியவை:
* கலவை கொதிக்கும் போது சற்றே தள்ளி நின்று கிளறுங்க.
* இனிப்பு அதிகம் என்பதல் அளவோடு உண்ணவும்.

நன்றி:
கிமீக்கா

புரியாணி


சிக்கன் புரியாணி

தேவையான பொருட்கள்:
பக் ப்க் - 1 கிலோ
பசுமதி அரிசி - 1 கிலோ
வெங்காயம் - 2
தயிர் - 1 கப்
இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 மே.க
கஸு நட்ஸ் - 15
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் தூள் - 1 மே.க
சின்ன சீரகம் -- 1 தே.க
ஏலக்காய் - 3
கராம்பு - கொஞ்சம்
கராம் மசாலா தூள் - 1 தே.க
பே இலைகள் - 5 (அது பேய் அல்ல)
மல்லி தளை - 1 கப்
எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை)
உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை)


செய்முறை:
* இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும்.

1. வெங்காயங்களை சுத்தமாக்கி, நீள வாக்கில் வெட்டி எடுக்கவும்.

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

3. அதனும் மேற்கூறிய அனைத்து ஸ்பைஸயும் போடலாம். (மல்லிதூள், கராம்பு, ஏலக்க்காய், பே இலை). 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும். (சட்டி கந்தலாகும் வாய்ப்புகள் அதிகம்)

4. பின்னர் அதனுள் 1 வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5. அதனுள் ஏற்கனவே நாம் 1மணித்தியாலம் ஊற வைத்த இறைச்சியை போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

6.இப்பொழுது அரிசியை எடுட்த்து அரைப்பதம் வேகும் வரை உப்பு சேர்த்து அவிக்கவும். (ரைஸ்குக்கரில் போட்டால் இலகு)

7. சிறிதளவு நெய்யிலோ/ எண்ணெயிலோ அடுத்த வெங்காயத்தை பொன்னிறமாகக பொறித்தெடுக்கவும். அதே போல கஸு நட்சையும் பொறிக்கவும்.

8. இப்பொழுது 20 நிமிடம் போய் கறி என்று சொல்ல கூடய அளவில் ஒரு உணவு சட்டியில் இருக்க வேண்டும். அதற்கும் தேங்காய் பால் மாவையும், கராம் மசாலாவையும் போட்டு கலக்கி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.


* ஒவனை போட்டு 180 ல விட்டுவிடுங்க.அது பாட்டுக்கு கொஞ்ச நேரம் இருக்கட்டும்.


9. ஒரு தட்டையான பாத்திரத்தில் (ஒவனில் வைக்க கூடிய) பாதி சாதத்தை கொட்டி பரப்பவும்.

10. அதன் மேல் கறியில் பாதி, பின்னர் சாதம், பின்னர் கறி & இறுதியாக சாதத்தை கொட்டி பரப்பவும்.

11. அதன் மேல் பொறித்த வெங்காயம், கஸு நட்ஸ், மல்லி இலையை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றவும்.

12. ஏற்கனவே போட்ட ஒவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

13.இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன் பரிமாறாலாம். (அல்லது நீங்களே சாப்பிடலாம்.அது உங்க இஸ்டம்)

சர்க்கரை பொங்கல்


தேவையான பொருட்கள்:
அரிசி = 1 பேணி
வறுத்த பாசி பயறு = 1/3 பேணி
சர்க்கரை = 1 பேணி
தேங்காய் பால் = இ பேணி
நீர் = 3 பேணி
Cashewnuts = 2 மே.க
Raisins = 2 மே.க

செய்முறை:
1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.

2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தூய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.

3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் Cashewnuts & Raisins யும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.

சுவையான சர்க்கரை பொங்கல் ஆயத்தம். சாமிக்கு படைக்காமல் சாப்பிட்டால் பாவம் கிடைக்கும்!

எள்ளுருண்டை


எங்க ஊர்ல எள்ளுருண்டை மிகவும் பிரபலம். ஊர் கதையை கொஞ்சம் நிறுத்திவிட்டு புலம்பெயர் நாடுகளில் பார்க்கலாமே. எந்த ஒரு ஈழத்து கடைக்கு சென்றாலும் அங்கு எள்ளுருண்டை இல்லாமல் போகாது. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் அன்பு சகோதரன் ஆயில்யனுக்காக இந்த இனிப்பு /பதிவு:



தேவையான பொருட்கள்

எள் 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை


செய்முறை:
1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.]
3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள்.
4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும்.
6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். உருண்டைக்கு பதிலாக, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி அமத்தி, துண்டுகளாக வெட்டயெடுக்கலாம்.


சீனி = Sugar

பி.கு:
1. உருண்டை பிடிக்கும் போது கொஞ்சம் மாஜரினை தொட்டு பிடித்தல் கையில் ஒட்டாமல் இருக்கும்.

2. உருண்டையை உங்களுக்கு வேண்டிய அளவில் பிடிக்கலாம்.

கச்சான் அல்வா


தேவையான பொருட்கள்:
கச்சான் முத்து 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை
கோதுமை மா 2 தே.க

செய்முறை:

1. கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் கசக்கி புடைத்து பாதி முத்துக்களாக்கி கொள்க.
2. தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்க.
3. ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுத்துகொள்ளுங்கள்.
4. சீனி முழுவதும் இளகி பாகாக வரும் போது , அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்க.
5. பின்பு சீனி பாகில் கச்சான் முத்தை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும்.
6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டியெடுக்கவும்.


கச்சான் = peanut
சீனி = Sugar

கேசரி

தேவையான பொருட்கள்:

500 கிராம வறுத்த ரவை
400 கிராம் சீனி (சர்க்கரை)
1/2 தே.க கேசரி தூள் (coloring)
1/2 தே. க ஏலக்காய் தூள்
1 கப் பால்
2 கப் நீர்
Cashew Nuts
2 மே.க Sultanas
பட்டர் / நெய் (உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு)

செய்முறை:
1. சட்டியில் நெய்யை போட்டு சூடாக்கி sultanas போட்டு பொரித்தெடுக்கவும்.
2. அதே சட்டியில் பால், நீர் & கேசரி தூளை போட்டு கொதிக்கவிடவும்.
3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், இரண்டு பேர் என்றால் நல்லம்)
4. ரவையை போட்டதும் சிறிது சிறிதாக சீனியை சேர்க்கவும். உடனேயே நெய்யையும், சுல்டானஸையும், ஏலக்காய் தூளையும் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
5. நெய் பூசிய தட்டையான பாத்திரம் ஒன்றில் கலவையை கொட்டி பரப்பவும்.
6. விரும்பிய படி வெட்டி, ஒவ்வொரு துண்டிலும் cashew வை பதிக்கவும்.

கிழங்கு ரொட்டி


வெள்ளிகிழமை என்றாலே எங்க வீட்டில் சிலருக்கு கவலை! பின்னே இன்று அசைவம் கிடைக்காதே. அதனாலேயே வெள்ளிகிழமைகளில் வித்தியாசமாக எதையாவது சமைப்பதுண்டு. இன்று காலையிலேயே கிழங்கு ரொட்டி செய்வது என நினைத்ததை செயல்படுத்தியது கீழே:


ரொட்டி

தேவையானவை:
கோதுமை மா (Plain Flour) - 1 கோப்பை
பட்டர் 1 மே.க
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
1. மா,பட்டர்,உப்புடன் நீர் சேர்த்து நன்றாக குழைத்து எடுங்கள்.
(சாதாரண ரொட்டியின் பதம்)
2. குழைத்த மாவை சில மணித்தியாலங்கள் வையுங்கள்.
(மாலையில் செய்வதென்றால் காலையில் குழையுங்கள்)
3. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளுங்கள்.


அப்படியே நில்லுங்க, கறியை ஆயத்தம் செய்வோம்...

கறி

தேவையானவை:
உருளை கிழங்கு 2
வெங்காயம் 1
செத்தல் மிளகாய் 2
சீரகம் 1 தே.க
கடுகு 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மிளகாய் தூள் 1 மே.க
கறிவேப்பிலை 10 இலைகள்
உப்பு தேவையான அளவு
தேசிக்காய் புளி உங்கள் சுவைக்கேற்ப

செய்முறை:
1. உருளை கிழங்கு, வெங்காயத்தை தோலுரித்து வெட்டி கொள்ளுங்கள்.
2. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை முறையே வதக்குங்கள்.
3. வதக்கிய கலவையில் உருளைகிழங்கு, தூள்கள், உப்பு சேர்த்து 1 பேணி நீர் சேர்த்து அவிய விடுங்கள்.
4. கிழங்கு அவிந்து, நீர் வற்றி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேசிக்காய் புளி சேர்த்தால் கறி ஆயத்தம் ஆகிவிடும்.


இனி,

மாவை மெல்லிதாக உருட்டி, ஒரு தேவையான அளவு கறியை வைத்து சுற்றுங்கள்.(பெட்டி வடிவம்).
தேசைக்கல்லை சூடாக்கி, ரொட்டியை போட்டு 6 பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுங்கள்.

தொட்டுக்க:
சட்னி வகைகள்
தக்காளி சோஸ்

அம்புட்டுதான்!

முட்டை சம்பல்


மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. இதில் முட்டை சம்பல் மிக விரைவில் செய்துவிடக்கூடியது. பல முறைகளில் ஒரு முறை இது.

தேவையானவை:
முட்டை - 5
செத்தல் - 3
ஸ்ப்ரிங் ஒனியன் - 3 தடல்
உள்ளி,இஞ்சி விழுது - 1 மே.க
புளி கரைசல் - 1/2 மே.க
சோயா சோஸ் - 3/4 மே.க
Prawn Paste - 3/4 மே.க
எண்ணெய் - 1 மே.க
சீனி - 1 தே.க
உப்பு தேவைக்கேற்ப

1. முட்டையை அவித்து, ஓடுடைத்து வைத்துக்கொள்ளுங்க.
2. செத்தலை நீரில் 10 நிமிடங்களுக்கு ஊறவைத்த பின்னர் நன்றாக அரைத்தெடுத்துக்கணும்.
3. ஸ்ப்ரிங்க் ஒனியனை சிறிதாக அரிந்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, அரிந்ததை போட்டு ஒரு நிமிடத்திற்கு வதக்குங்க.
4. பின்னர் அதில் உள்ளி&இஞ்சி விழுதையும், அரைத்த செத்தலையும் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை கிளறுங்க.
5. வதங்கி வரும் கலவையில் முதலில் புளி கரைசலையும், பின்னர் சோயா சோஸ், இறால் கலவையை சேர்த்து 30 விநாடிகளுக்கு மட்டிம் கிளறியபின்னர் அவித்த முட்டையை சேர்த்து கலவையை இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க.
6. இறுதியாக சிறிதளவு சீனி சேர்த்து, கிளறி உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான முட்டை சம்பல் ஆயத்தம்.

சொற்கள்:
சீனி - சக்கரை - Sugar
உள்ளி - வெள்ளை பூண்டு - Garlic
செத்தல் - காய்ந்த மிளகாய் - Dried chillies

கவனிக்க வேண்டியவை:
* காரம் பிடிக்கலை என்றால் செத்தலின் எண்ணிக்கையை குறைக்கலாம். சாப்பிட வாறவங்கள பிடிக்கலைன்னா செத்தலில் எண்ணிக்கையை அதிகமாக்கலாம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்
* இறுதியில் விருப்பமென்றால் மல்லி இலைகளை சேர்க்கலாம்.
">See all videos'); document.write('

பார்வையாளர் எண்ணிக்கை ?max-results=10">Video Category 1

'); document.write("?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts1\"><\/script>");

உங்கள் ருசிக்கு..

நல்வரவு

இன்று

இதுவரை சமைத்து

Recent Comments

Powered by Blogger.

தமிழருவி நேரஞ்சல்

மறக்கமுடியுமா

விளம்பரம்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. சமையல் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger